முன்பு பலர் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன.
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.இப்படம் ஆரம்பமாவதற்கு முன்பு பலர் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன.
அவர்களில் ஒருவர் தான் அமலாபால். அந்தப் படத்தில் நடிக்க வேண்டாமென விலகியது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.”எல்லாரும் எல்லா படத்திலும் நடித்துவிட முடியாது.
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் தந்த கதாபாத்திரத்தில் என்னால் நியாயமாக நடித்திருக்க முடியாது. எனக்குப் பொருத்தமில்லாத, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு என நினைத்தேன். அப்படி நடித்திருந்தால் பின்னர் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அவரது படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.