எடுக்கறது சாமி படம்.. அடிக்கறது சரக்கா.. மூக்குத்தி அம்மன் டீமை விளாசும் நெட்டிசன்கள்..

சினி நியூஸ்

balaji

சமீபத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா உள்ளிட பலரும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் சாமி, மதம் ஆகிய பேரில் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், போலி சாமியார்கள் பற்றியும் பேசப்பட்டது. இப்படம் ஒடிடியில் வெளியானது. ஆனாலும், தயாரிப்பாளருக்கு மூன்று மடங்கு லாபத்தை இப்படம் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாடியது. இதில், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பல தொழில்நுட்ப குழுவினர் கலந்து கொண்டனர். சினிமா துறையினர் பார்ட்டி என்றால் சரக்கு இல்லாமலா? . ஜாலியாக சரக்கடித்து பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். இந்த பார்ட்டியில் நயன் கலந்து கொள்ளவில்லை.

party

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் எடுக்கறது சாமி படம்.. அடிக்கறது சரக்கா? என படக்குழுவினரை விளாசி வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.