dance master sivasankar - 2026

கொரோனா சிகிச்சையில் இருந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவரே.

சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி – ராம் சரணின் ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வரலாறு’, ‘பரதேசி’, ’அரண்மனை’, ’கஜினிகாந்த்’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்தவர் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மேலும் கவனம் ஈர்த்தார்.

sivasankar - 2026

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை வைத்து இருந்தார்.

நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சைக்கு சோனு சூட் உதவுவதாக உறுதி அளித்து இருந்தார். அதேபோல், நடிகர் தனுஷும் அவரது சிகிச்சைக்கு தொகை ஒன்றினை அளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending