April 30, 2025, 10:25 PM
30.5 C
Chennai

திருமணம் கூடவும், பிரிந்த தம்பதியர் சேரவும்.. உமாமகேஸ்வர ஸ்தோத்திரம்!

sivan parvathi
sivan parvathi

உமாமஹேச்வர ஸ்தோத்ரம்

1.நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்!
நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

இளம் வாலிப வயதினராய் ஒருவரோடு ஒருவர் இணைந்து சிவனும், சிவைவுமாய், மலையரசன்மகளாயும், வ்ருஷப்க்கொடியோனாயும் காட்சி தரும் சங்கர-பார்வதீ தேவியாருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

2.நம:சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்
நமஸ்க்ருதா பீஷ்டவரப்ரதாப்யாம்!
நாராயணேநார்சித பாதுகாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம் !!

சிவனும் சிவையுமாய் இனிய விழா கண்டு நமஸ்கரித்த பக்தர்களின் விருப்பப்படி வரமளித்து, நாராயணன்தானே அர்ச்சிக்கும் காலடிகளைக் கொண்டு காட்சிதரும் ஸ்ரீசங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

3.நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

விருஷப வாஹனம் ஏறியவர்களும், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டவர்களும், விபூதி, சந்தனம் பூசியவர்களும் ஆன ஸ்ரீசங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

4.நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

உலகத்தலைவர்களாயும், வெற்றியே வடிவமானவராயும், இந்திரன் முதலியோரால் போற்றப்பட்டவர்களுமான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

ALSO READ:  மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
sivan parvathi
sivan parvathi

5.நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

(சம்ஸார வியாதிக்கு) அருமருந்தானவர்களையும், பஞ்சாக்ஷரக்கூண்டில் விளையாடும் (கிளிகளாயும்) , இந்த உலகை சிருஷ்டித்தும், காத்தும், ஒடிக்கியும் நிலவுகின்ற சிவ பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

6.நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

மிக அழகிய தோற்றமுடைய சிவனும் சிவையும் தம்ஹ்ருதயத்தாமரைகள் மூலமும் மிகவும் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்கள் அனைத்துலகுக்கும் நன்மை செய்வதில் தமக்குத்தாமே நிகரானவர். அவர்களுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

7.நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

கலிதோஷம் நீங்கச் செய்வபராயும், எலும்பு மிளிரும் மங்கல சரீரம் கொண்டவரும், கைலாஸத்தில் வாசம் செய்யும் தேவதைகளுமான ஸ்ரீசங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

8.நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

அமலங்களைப் போக்குபவரும், உலகமனைத்திலும் மேம்பட்டவரும், தடையில்லாதவரும், தியாயனத்தில் தேக்கப்பட்டவருமான சங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

arthanariswarar
arthanariswarar

9.நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

பௌர்ணமி சந்திரன் போன்ற முகங்களுடனும், சூர்ய. சந்திர, அக்னியாகிய கண்களுடனும் தேரில் ஏறிச் செல்பவரான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

10.நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

ஜடையணிந்து, மூப்பு, மரணமில்லாதவரும், விஷணு பிரம்ம தேவர்களால் வழிபட்டவருமான சங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

11.நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

மூன்று கண்கள் உடையவரையும், பில்வ இதழ் மல்லிகை மாலை இவற்றை தரித்தவரும், அழகு, அமைதி இவற்றன் நாயகர்களாகவும் திகழ்கின்ற சங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

  1. நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
    ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!
    ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
    நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

ஜீவாத்மாக்களாகிய பசுக்களைப் பாதுகாப்பவரும், மூவுலகையும் காப்பதில் மனம் வைத்தவரும், அனைத்து தேவ, அசுரர்களாலும் போற்றப்பட்டவருமான சங்கரபாரவதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

uma maheswarar
uma maheswarar

13.ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோ ய:
ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே
சதாயுரந்தே சிவலோக மேதி!!

சிவபார்வதீப்யாம் நம:என்ற தொடருடைய பன்னிரண்டு பத்யங்களைக் கொண்ட ஸ்தோத்திரத்தை மூன்று வேளைகளிலும் படிப்பவர் எல்லாவித ஸெளபாக்யங்களையும் அனுபவித்து, நூறாண்டுகள் வாழ்ந்து, முடிவில் சிவலோகம் எய்துவர்.

ALSO READ:  காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories