உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கிய டைரக்டர்ஸ் க்ளப்!

Q70A0428 - 2026

முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club !

Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர்.

Q70A1257 - 2026

உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் Directors Club குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Directors Club நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் தந்தையுமான SA சந்திரசேகர் அவர்கள், மற்றும் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள்,மற்றும் நடிகர் காளி வெங்கட் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
Q70A0694 - 2026

இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, CSI காது கேளாதோர் பள்ளி சார்பில் வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் நடத்திய நாட்டிய நிகழ்வு அனைவர் மனதையும் கவர்ந்தது. இதனையடுத்து, 2020 மற்றும் 2021 ஆண்டில் வெளியான திரைப்படங்களில் ஒரு சிறந்த படத்தை Director’s club, உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதில் பணியாற்றிய உதவி இயக்குநர் குழுவிற்கு, விழாவில் விருது வழங்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்பட உதவி இயக்குநர் குழுவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Q70A1018 - 2026

இந்தியாவிலேயே உதவி இயக்குநர்கள் அங்கிகரிகப்படுவதும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் நிறைவில் Director’s Club அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. உதவி இயக்குநர்களுக்கான இலவச பயிற்சி பட்டறையாகவும், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் களமாகவும் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories