காக்கா முட்டை படத்தை என் நெஞ்சில் பச்சை குத்தி வைத்திருக்கிறேன்: மலையாள நடிகர் நெகிழ்ச்சி!

Published:

மலையாளத்தில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி காமெடியர்களில் ஒருவராக திகழ்பவர் ஹரிஸ்ரீ அசோக். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, திலீப், குஞ்சாக்கோ போபன், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஷிபு சேகர், ரஷீத் ஆகிய இருவர் இயக்கும் ‘அஞ்சேல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இது பற்றி கூறும்போது:

காமெடியன் என்றால் காமெடி மட்டும்தான் வரும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒரு நடிகன் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை வேண்டும்.

தமிழ் படத்தில் நடிப்பது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமாவை பார்த்து நான் மிகவும் வியந்திருக்கிறேன். ஆக்ஷன், செண்டிமென்ட், காதல் என எந்த படமென்றாலும், தமிழ் சினிமாவில் திறமையாக எடுக்கிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்தை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். தேசிய விருதுக்கு தகுதியான, சரியான படத்தைதான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழுத்தமானது. ‘காக்காமுட்டை’ படத்தை என் நெஞ்சில் பச்சை குத்தியதுபோல் பதிய வைத்திருக்கிறேன். ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனரை நான் பார்த்தால், அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

‘அஞ்சேல்’ படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுமன், கலாபவன் மணி உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img