சினிமா இணையதளத்திற்கு நிதியுதவி அளித்த சூர்யா

சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com, வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம், மற்றும் இதர முதலீட்டாளர்கள் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வாத்வா (முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன் (UK), ஷங்கர் வெங்கடேசன் (Poland), மற்றும் வசிகரன் வெங்கடேசன் (USA) இருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டை பெற்றுள்ளனர்.

2014ல் தொடங்கப்பட்ட 2D Entertainment நிறுவனம், 36 வயதினிலே, பசங்க 2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும் அடுத்து சூர்யா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான “24” படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன் வழியாகவே இந்த முயற்சியில் நாங்கள் முதலீடு செயுதுள்ளோம்”. என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர் பாண்டியன் கூறியுள்ளார்.

“நானும் என் சகோதரன் ஆதியும் மிகுந்த ஆவலுடன் எங்கள் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட காத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா போன்ற முன்னணி நடிகர் இதில் விருப்பம் காட்டியது, எங்களை சிறந்த முறையில் ஊக்குவிப்பதாக இருக்கிறது” என இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டு இருகின்றது. திரைபடங்கள் விநியோகம் செய்ய ஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து Piracy ஒழிக்கும் இந்நிறுவனத்தின் நோக்கத்தில், இது பெரும்வாரியாக உதவும்.