நடிகை ஷ்ரேயாவை ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அண்மைக் காலமாக நடிப்புக்கு நடையைக் கட்டிவிட்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்ட ரஷ்யக் கணவர் அன்றேவுடன் செட்டில் ஆகிவிட்டாலும், ரசிகர்களுக்கு அவ்வப்போது தன் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என்று கூறிய ஷ்ரேயா, காதல் கணவருடன் சுகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இருப்பினும், தன் வழக்கமான கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதை அவர் நிறுத்தவில்லை.
திருமணத்திற்குப் பின்பும் பல கவர்ச்சிப் படங்களையும் அரை நிர்வாணப் படங்களையும் இன்ஸ்டாக்ராமில் போட்டு சூடேற்றி வருகிறார். தற்போது ஷ்ரேயாவின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்குச் சென்ற ஷ்ரேயா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.




