அரண்மனைக்கிளி தொடரில் விஸ்வகர்ம சமுதாயத்தை இழிவு படுத்துவதற்கு மன்னிப்பு கோர வேண்டும்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
aranmanaikili1 horz - 2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி தொடரில் விஸ்வகர்ம பொற்கொல்லர் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் எழுதிய வசனகர்த்தா, அதனை பேசி நடித்த நடிகை, இக்காட்சியை இயக்கிய இயக்குநர், இக்காட்சியை ஒளிபரப்பு செய்த விஜய் டிவி நிர்வாகம் ஆகியோர்களை தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இத்தொடரில் இனி வரும் காட்சிகளின் அடிப்படையில் பொற்கொல்லர் சமுதாயத்தினை இழிவுபடுத்திய நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்கும் வகையில் காட்சி அமைக்கப்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில் மேற்கண்ட நபர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாமரை முருகன், மாநில தலைவர்,
பொ.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர்,
தங்கராஜ், மாநில துணை தலைவர்,
வழக்கறிஞர் தாமோதர ராஜ் ,மாநில சட்டக்குழுத் தலைவர், பொன்ராஜ், மாநில அமைப்புச் செயலாளர்,
சங்கரன், மாநில துணை பொதுச் செயலாளர்,
பேச்சியப்பன், மாநில இணை பொதுச் செயலாளர்,
மாரிமுத்து, நெல்லை மாவட்ட செயலாளர்,
செண்பகராஜ், நெல்லை மாவட்ட பொருளாளர்,
சுப்பிரமணியன், நெல்லை நகர தலைவர்.

viswakarmaperavai - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.