
- பட்டம் விட்டபோது பரிதாபம்.
- உயிரை வாங்கிய பட்டம்.
- காற்றில் பட்டம் விட்ட போது நடந்த சோகம்.
சங்கராந்தி பண்டிகை நேரத்தில் வேறு வேறு சம்பவங்களில் பட்டம் விட்ட ஒருவர் மரணமடைந்தார்; ஒரு சிறுவன் தீவிரமான மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானான்!
ஹைதராபாத் சிக்கடபல்லியில் வசிக்கும் டிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் பங்காரு கிருஷ்ணா (44) வியாழக்கிழமை மாலை மூன்று மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு ஆளானார். பக்கத்து வீட்டு மாடியில் தடுப்புச் சுவரில் இருந்த இரும்பு கிரில் வயிற்றில் குத்தியதால் அலறினார்.
உடனிருந்தவர்கள் உடனடியாக 108க்கு போன் செய்து ஒரு மணி நேரம் ஆனாலும் ஆம்புலன்ஸ் வரவில்லை. போலீசார் அங்கு வந்து சேர்ந்து அங்கிருந்தவர்களின் உதவியோடு தீவிரமாக காயப்பட்ட அவரை கம்பிகளிலிருந்து வெளியில் எடுத்தார்கள். அதற்குள்ளாகவே நிறைய ரத்தம் போய்விட்டது. டிராலி ஆட்டோவில் அவரை வைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்து போனார்.

அதிலாபாத் நகர் திர்ப்பல்லியைச் சேர்ந்த சிறுவன் சாய்சரண் நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் விட்டபோது அது மின்சாரக் கம்பியில் சுற்றிக்கொண்டது.
மாடிக்குப் போய் அதனை எடுக்க முயற்சிக்கையில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டான். தலைக்கும் காலுக்கும் கைக்கும் தீவிரமாக காயம் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் உடனடியாக ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார்கள். நிலைமை மிகவும் சீரியஸாக இருந்ததால் அங்கிருந்நு ஹைதராபாத்துக்கு அனுப்பினார்கள்.