
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் – நேரு யுவகேந்திரா கரூர் மற்றும் வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய தேசிய இளையோர் வார விழா நடைபெற்றது.
விவேகானந்தர் பிறந்த நாள் விழா, சமுதாய நலப் பணி நாள் விழா(ரத்த தான முகாம்)வில், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் மன்ற தலைவர் திரு. இல. மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார்.

வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு. மு. கந்தசாமி அவர்கள் தலைமை தாங்கினார். வரவனை ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி. போதும் பொண்ணு சிவசக்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.
கரூர் மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் திரு திரு. பிரிஜேஷ் கௌசிக் அவர்கள் நோக்க உரை நிகழ்த்தினார். கரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் திரு.இ. செந்தில் அவர்கள், திரு. தமிழழகன் அவர்கள்,திரு.வி.கே. முருகேசன் அவர்கள் கருத்துரை வழங்கினர்.
திரு.அ. ஐயப்பன் பொருளாளர், திரு.ஆ. கார்த்தி மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஏற் பாடு செய்தனர். திரு. போம்முராஜ் nsv அவர்கள் நன்றியுரை கூறினர்