
நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு.
அதிர்ச்சியளித்த திருப்பம்.
ஆந்திர முதல்வரின் இரண்டாவது மனைவி நான் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தினாள். தடுக்கச் சென்ற உள்ளூர் மக்கள் மீது கல்லெறிந்தாள். விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி அட்டகாசம் செய்தாள். அதுவும் முதல்வரின் காம்ப் ஆபீஸ் மற்றும் இருப்பிடமான தாடேபல்லியில்.
முதல்வரின் வீட்டிற்கு மிக அருகிலுள்ள தடேபல்லி மகாநாடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால் அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிந்ததால் போலீசார் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர்.
தாடேபல்லி நகர எல்லையில் கிருஷ்ணா நதி தீரத்த்தை ஒட்டி உள்ள மகாநாடு என்ற இடத்தில் மனநிலை சரியில்லாத பெண் போகி பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்தினாள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி தகராறில் ஈடுபட்டாள்.
அவள் மனநிலை சரியில்லாததால் உள்ளூர் மக்கள் அவளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தாலும் இயலாமல் போனது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை எதிர்த்து அவர்கள் மீது கல்லெறிந்தாள். அதனால் உள்ளூர் மக்கள் தாடேபல்லி போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனநிலை சரிஇல்லாத அந்த பெண்ணை பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு விவரங்களை சேகரித்தனர்.
சிலுக்கலூர்பேட்டை யைச் சேர்ந்த தனலட்சுமி ஆக அடையாளம் கண்டனர். மகாநாடாடைச் சேர்ந்த ஒரு ஒய்சிபி ஆதரவாளரின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.