May 10, 2021, 12:24 am Monday
More

  அழிந்து போகும் நிலையில் ஆலயங்கள்! காரணம் என்ன?!

  திராவிட அரசுகள் நினைத்திருந்தால் அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம். பல நூறு

  madurai-temple-darshan2
  madurai-temple-darshan2

  திராவிட அரசுகள் நினைத்திருந்தால் அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!

  இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும். உண்டியலில் பணம் ? இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பயனற்று அழிந்து போகும் நிலையில் உள்ளன ??

  காரணம் என்ன???

  1. பழனி முருகன் கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகளுக்கு மேல்.
  1. திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர்-ரத்னகிரி,திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  2. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  3. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  4. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில் வருமானம் 100 கோடிகளுக்கு மேல்.
  5. சென்னை வடபழனி, பார்த்தசாரதி, கபாலி, அஷ்டலட்சுமி, காளிகாம்பாள், மருந்தீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  6. தேனி வீரபாண்டி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன்,சமயபுரம் மாரியம்மன், பண்ணாரி அம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்கள் வருமானம் 200 கோடிகளுக்கு மேல்.
  7. கும்பகோண மகாமகக் கோவில்கள், தஞ்சைக் கோவில்கள் வருமானம் 100 கோடிகளுக்கு மேல்.
  8. ராமேஸ்வரம், நெல்லையப்பர், சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்கள் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  9. கோவை ஈச்சனாரி விநாயகர், மருதமலை, பேரூர், ஈரோடு, திருப்பூர்,நீலகிரி,சத்தியமங்கலம் கோவில்கள் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  10. திருச்செந்தூர் முருகன், தென்காசி கோமதியம்மன், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,கோவில்பட்டி, குற்றாலீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
  11. பிள்ளையார்பட்டி விநாயகர், குன்றக்குடி முருகன், காரைக்குடி, புதுக்கோட்டை கோவில்கள் வருமானம் 100 கோடிகளுக்கு மேல்.
  12. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோபி, விழுப்புரம், கோவில்கள் 100 கோடிகள்
  13. திண்டுக்கல், காஞ்சி,கரூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர், கோவில்கள் வருமானம் 100கோடிகள்

  150+150+150+150+100+150+200+ 100+150+150+100+100+100= ஆக மொத்தம் 1800 கோடிகளுக்கு மேல்.

  இவ்வளவு வருமானம் வந்தும், இந்த கோயில்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் கோவில் நிர்வாகமும் மற்றும் அரசும் இந்த பணத்தை எல்லாம் வேறு வேறு காரியங்களுக்கு உபயோகப்படுத்துகின்றன.

  உதாரணமாக, இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்கப்படுகின்றன. வாரா வாரம் நடக்கும் அலுவலக மீட்டிங்ககளுக்கு கிலோ கணக்கில் ஸவீட் , காரம் வாங்கி வயற்றில் கொட்டப்படுகின்றன. போக உண்டியல் வைத்துள்ள ஆயிரமாயிரம் இந்துக் கோவில்களும் அதன் சொத்துக்களும் இந்த அரசுத் அறநிலையத் துறையின் கீழ் வருபவையே.

  அவை போக, மேலும் கீழ்க்காணும் வருமானங்கள்::

  கோவில்களில் உள்ள உண்டியல், நேர்த்திக்கடன்கள்,
  திருக்கல்யாணம், தேர் இழுப்பு, மொட்டையடித்தல், அர்ச்சனை,
  அபிஷேகம், பிரசாத விற்பனை, வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு மன்னர்கள் எழுதி வைத்த பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள், கோவிலைச் சுற்றிய வீதிகளில் இருக்கும் கடைகள் மூலம் வரும் மிகமிகக் குறைந்த குத்தகை.

  இவ்வாறாக, குறைந்தபட்ச வருமானம் என்பது கோவில்கள் வாயிலாக 1800 கோடிகளுக்கு மேல் . இவையெல்லாம் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. கோவில்கள் வழியாக வரும் இது போக சைவ ஆதீனங்களது சொத்துக்கள் வழியாக வரும் வருமானம் வேறு. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பல்வேறு சைவ ஆதினங்களுக்குச் சொந்தமானவை.

  மேல்மருவத்தூர் கோவில் நிறுவனம் இந்தத் துறையின் கீழ்வராததால் விளைந்த நன்மைகள்:

  1)பாலி டெக்னிக் கல்லூரி
  2)இஞ்சினியரிங் கல்லூரி
  3) மருத்துவப் படிப்புக்கல்லூரி + மருத்துவமனை என மக்களுக்கு பக்தர்களின் காணிக்கை, சடங்குகள் வழி வருமானம் செலவிடப் பட்டிருக்கிறது.

  காஞ்சி சங்கரமடம் மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமாஷி கோவில் + இதர கோவில்கள் வழி பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, சடங்குகள், பிரசாத விற்பனை வருமானம் சங்கரா பள்ளிகளாக, சங்கரா கல்லூரிகளாக தமிழகமெங்கும் மக்களுக்கு உதவும் வழியில் செலவிடப்பட்டு வருகின்றன.

  திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருமானத்தில் ஒரு யூனிவர்சிட்டி, 25 கல்லூரிகள், கல்விநிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என இறைவனால் கிடைக்கும் வருமானம் கல்விக்கு முழுமையாகப் பயன்படுத்துகிறது.

  ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் இந்துமத கோவில்கள் மூலம் இத்தனை வருமானங்கள் வந்தும் நம்மால் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று மக்களுக்குப் பயன்படுகிற மாதிரியான நல்லதைச் செய்வதில்லை.

  1800 கோடிகளைச் செலவழித்து 50 கல்லூரிகள் கட்டலாம். படிப்புக்கு இட ஒதுக்கீடு அவசியப்படாமல் கேட்டால் படிப்பு கிடைக்கும் படி இட ஒதுக்கீட்டையே இல்லாமல் ஆக்கிவிடலாம். மருத்துவமனைகள் பல கட்டி மக்களின் சுகாதார, ஆரோக்கியம் பேணலாம்.

  இந்துக் கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கடவுளே இல்லை, இல்லை, இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டமும், தமிழக அரசும் அதிகாரத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இருந்தபடியே, கொள்ளையடிக்கின்றன.

  சதா சர்வ காலமும், பிராமண எதிர்ப்பு என்பதிலேயே மக்களை திசைதிருப்பி, “காணிக்கையை உண்டியலில் மட்டுமே போடவும்” என்று அறிவிப்புப் பலகைகள் வைத்து, மிக மலிவாக குத்தகையை கழகக் கண்மணிகளுக்கு விட்டு, என எல்லா வகையிலும் மொத்தமாக கோவில் வருமானங்களான நிதியைக் கொள்ளை யடிப்பது அரசும் அதன் துறையும்.

  தமிழக கோவில் சொத்துக்களை, திராவிட அரசியல் தலைவர்கள், வட்ட, மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும். இந்த அநியாயங்களை பொது மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • வைரல் பதிவு பகிர்வு

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,169FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »