தென்மாவட்ட மக்கள் போராட வேண்டும்! எதற்காக..?!

Published:

sterlite tuticorin - 2026

சிங்கப்பெருமாள் கோவிலிருந்து – ஸ்ரீபெரும்புதூர் 42 கிலோ மீட்டர்கள் – இரண்டு பக்கமும் இடைவெளி இல்லாமல் தொழிற்சாலைகள்!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன – இங்கெல்லாம் பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டங்களிலிருந்து செல்பவர்கள்!

இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் கூட பெரும்பாலும் தூத்துக்குடி துறைமுகம் வந்துதான் பிற பகுதிகளுக்கு செல்கின்றன. மின்சாரம் கூட, பெருமளவிற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காற்றாலைகள், சோலார் மின் உற்பத்தி மேலும் கூடங்குளத்தின் அணு மின்நிலையம் மூலம் செல்கிறது!

ஆனால், தென்மாவட்டங்களில் உருப்படியான தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருபுறமும் விவசாயமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, தொழிற்சாலைகளும் அவ்வளவாகக் கிடையாது !

Kudankulam - 2026

தென்மாவட்டங்களிலிருந்து அனைத்தையும், மனிதவளம் முதற்கொண்டு பெற்றுக்கொண்டு தான் சென்னை பொருளாதாரத்தை வளர்க்கிறது ! தென் மாவட்ட மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக பல நூறு கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து வாழ வேண்டியுள்ளது !

விடுமுறை நாட்கள் வந்து விட்டால் கோயம்பேட்டிலும், எழும்பூரிலும் அலைபாயும் மக்கள்! இந்த நிலையில், ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளையும் பொய்யான சில காரணங்களைக் கூறி மூடிவிட்ட பிரிவினைவாதிகள்!

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

உண்மையில், தொழிற்சாலை இவர்களுக்கு பிரச்னை இல்லை! இதைச் சாக்காக வைத்து மத்திய அரசை எதிர்க்க வேண்டும் – கெட்ட பெயரை உருவாக்க வேண்டும்!

இதே போன்றுதான், கூடங்குளம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம், தேனி நியூட்ரினோ திட்ட எதிர்ப்புகள் எல்லாமே!

இத்தனைக்கும் இவற்றில் எதுவுமே மோடி கொண்டுவந்த திட்டங்கள் அல்ல –
அவ்வளவு ஏன்… இப்பொழுது மோடி அரசு 10,000 கோடிகளில் அறிவித்துள்ள சேலம், சென்னை எட்டு வழி விரைவுச் சாலைச் திட்டத்தைக் கூட தொழிலதிபர் ஜின்டால் அவர்களது கம்பெனியின் வளர்ச்சிக்காக என்று கிளப்பிவிட்டு மக்களை குழப்பி வருகிறது ஒரு கூட்டம்!

நிச்சயமாக இவர்கள் நிலம் கையகப்படுத்த விடமாட்டார்கள்! ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்கி மோடியை வில்லனாக சித்தரிக்கும்! இது மட்டுமல்ல, நாளை நதிநீர் இணைப்புத் திட்டம் வந்தாலும் இதேதான் நடக்கும் !

03 Sep21 Sterlite copper - 2026

ஆனால் ஒருபுறம் பார்த்தீர்களேயனால் மோடியின் முத்ரா வங்கி திட்டத்திலும், ஆவாஸ் யோஜனா என்னும் வீடு கட்டும் திட்டத்திலும் அதிகப் பயனாளர்கள் தமிழர்கள்தான்! ஸ்டெர்லைட் ஆலையால், தூத்துக்குடி நகரில் காற்று மாசடைந்து விட்டதாக எந்த ஆய்வறிக்கையும் இல்லை!

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

சொல்லப்போனால் – காற்று மாசில் முதல் 500 நகரங்கள் பட்டியலில் கூட தூத்துக்குடி வரவில்லை – இந்த வீணாய்ப்போன அரசியல்வாதிகளை நம்பி, நாட்டின் காப்பர் தேவையில் 36%த்தை தயாரித்துக் கொடுக்கும் தொழிற்ச்சாலையை மூடிவிட்டார்கள்!

அதோடு இந்துக்களின் கோலாகலப் பண்டிகையான, தீபாவளிப் பண்டிகையை சீர்குலைக்கும் நோக்கில், தி.மு.க வின் கென்னடி என்பவன் தொடர்ந்த வழக்கால், இன்று குட்டி ஜப்பான் சிவகாசியே முடங்கிவிட்டது!

கிட்டத்தட்ட எட்டு லட்சம் மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்! இவை அனைத்துமே தென்மாவட்ட மக்களை நேரடியாகப் பாதிக்கும் சதிகள் என்பதும், இதன் பின்னே இருப்பது தி.மு.க என்பதும் கூட உங்களுக்குப் புரியவில்லையா?

கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களால் நிரந்தரமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம். வேலையிழந்த அப்பாவிகளும் மிக, மிக அதிகம்!இப்பொழுது தி.மு.கவினால் மூடப்பட்ட தொழிற்சாலைகளும் அதிகம்!

எனவே – தென்மாவட்டங்களுக்கு அதிகமாக தொழிற்சாலைகளை ஒதுக்க வேண்டும் என்று போராடுங்கள். சிப்பிப்பாறை அணைக்கட்டை கட்ட வலியுறுத்தி போராடுங்கள் !

#Save_Sterlite #Save_Sivakasi

  • ந.முத்துராமலிங்கம்
ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img