
இன்று 24 அக்டோபர் -வெள்ளைக்கார அரக்கர்களால் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் !
சிறைப்பிடிக்கவே முடியாத வெள்ளையர்கள் இறுதியில் இந்த வீர சகோதரர்களை எப்படிப் பிடித்துக் கொன்றனர் தெரியுமா? அவர்களின் உயிரை விட மேலாக மதித்தது காளையார் கோவிலை !
சரணடையாவிட்டால் கோவிலைத் தகர்க்கப் போவதாக அறிவிப்பு செய்தார்கள்! தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து கோவிலைக் காக்க தங்கள் தலைகளைக் கொடுத்த மாவீரர்கள் வாழ்ந்த மண் இது.
இது எப்பொழுதுமே ஆன்மீக பூமியாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதற்கு இது போன்ற சரித்திரச்சான்றுகள் ஏராளம்! மக்கள் மட்டுமல்ல, மன்னர்களும் என்றுமே முழுமையாக தங்களை இறைப் பணிகளுக்காக அர்பணித்திருந்தனர்.
வேலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப் பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார்.
அதனை ஏற்று, முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர்-
அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்! மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள்!

குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில் ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர் !
காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது! மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது!
மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது! மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர்! நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார் !
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர்! இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர்!
பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார்! அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க.. அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது,சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார்!
மரங்களை வெட்டாது, இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்துக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக்கு இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது!
காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது; தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது! அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல… அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார்!
குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது! ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான்! தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது! இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார் !

இது போன்றுதான் அக்காலத்தில் மன்னர்களும், மக்களும் !
நமது கோவில்களையும் தெய்வங்களையும் உயிராக நினைத்து அதன் மூலமே நாட்டுப்பற்றையும் கொண்டிருந்திருக்கிறார்கள். ராமேஸ்வரம் கோவில் புனிதத்தைக் காக்க தன்னுடைய இரண்டு மகள்களின் கணவனான, தனது சொந்த மருமகனுக்கு மரண தண்டனை கொடுத்த மன்னர் விஜயரகுநாத சேதுபதியாகட்டும்…
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தைக் காக்க தன்னுயிரைத் தியாகம் செய்த வெள்ளச்சி ஆகட்டும்… அனைவருமே நமது கோவில்கள், பண்பாடு, கலாச்சாரத்தின் மீது தான் உயிரையே வைத்திருந்தனர்! ஆனால், அவர்கள் வழியில் வந்த நாம் இன்று நமது பெருமை தெரியாமல் நமது பொக்கிஷங்களை திராவிடத் திருடர்களிடம் இழந்து வருகின்றோம்!
லட்சக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களைக் காணவில்லை. ஆயிரக் கணக்கான கோவில் சிலைகளைக் காணவில்லை! நித்தம், நித்தம் நமது நம்பிக்கைகள் மீதும், ஆசாரங்களின் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன!
ஆனாலும், சுரணையற்ற நிலையில் நம் இந்து மக்கள்! வேதனையாக இருக்கிறது நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல. அவர்களுடைய தியாகங்கள் அர்த்தமற்றுப் போய்விடக் கூடாது. இனிமேலாவது நாம் இந்துக்களாக இணைந்து திராவிடத் திருடர்களையும் அந்நிய மதங்களையும் விரட்டி அடிப்போம்!
- ந.முத்துராமலிங்கம்