இதுக்காகவே ப.சிதம்பரத்தை திகாரில் நிரந்தரமா போடணும்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
pratiba patil signed chidambaram - 2026

இந்த வீடியோவில்.. இந்திரா காந்தியின் அன்னாளைய சமையல்காரி.. (வருடம் 1970 களில்) அதன் பிறகு சூனியாவால் பாரதத்தின் ஜனாதிபதியாக்கப்பட்ட பிரதீபா பட்டேல் தன்னை முதன் முதலில் பதிவு செய்து கொள்கிறார் NPR இல். இதற்கு சாட்சியாக துணை நிற்பவர் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

பாரதத்தின் ஜனாதிபதி என்ற அந்த உயர்ந்த பதவியைப் பற்றி எப்படி ஒரு அபிப்ராயமிருந்தால்.. இந்த பிரதீபா படேலை ஜனாதிபதி ஆக்கியிருப்பார் சூனியா காந்தி.. அல்லது அந்தப் பதவியை அவமதிக்கவே இவரை ஜனாதிபதி ஆக்கினாரோ.. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ப.சிதம்பரம் பேசுகையில் தேசத்திலுள்ள 120 கோடி மக்களுக்கும் “யூனீக் ஐடெண்டிடி கார்ட்” – UID கொடுக்கப் போவதாக.. அதாவது புல்லுக்கட்டு தூக்குபவள், மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்.

ஆனால்.. அவர் இப்போது சிறையிலிருந்து வெளியே ஜாமீனில் வந்திருக்கும் ஊழல் கைதி. பேசுவது மொத்தமும் முன்னுக்குப் பின் முரண்.

எதையாவது ஒரு திட்டத்தை ஸ்டண்ட்டாக ஆரம்பித்து வைக்க வேண்டியது. அதுவும்கூட ஏதோ ஒரு ஊழலை மறைக்கத் தானோ என்று இப்போது தோன்றுகிறது. ஆனால்.. அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட வேண்டியது. இது ஒன்று மட்டும்தான் சூனியா, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் அரசின் 10 ஆண்டுகால சாதனை.

மற்றபடி மட்டற்ற ஊழல். இவர் இன்று அப்பழுக்கில்லாத நம் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் துளியும் வெட்கமில்லாமல் குறை சொல்கிறார்… அதுவும் இதே திட்டத்திற்காக..! ????????????

இதற்காகவே இவரை கூடிய விரைவில் திஹாரில் ஒரேயடியாகத் தள்ள வேண்டும்..!

  • எஸ்.பிரேமா

Video Curtesy – Shivaramasubramanians Iyer

1 thought on “இதுக்காகவே ப.சிதம்பரத்தை திகாரில் நிரந்தரமா போடணும்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.