இதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..!

Published:

kalanidhi maran - 2026

Forbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்

https://www.forbes.com/profile/kalanithi-maran/#644a60f43423

அவரின் சொத்து மதிப்பு … அமெரிக்க டாலரில் சுமார் 2.4 பில்லியன் என்று சொல்லி இருக்கிறார்கள் .. அதை நமது இந்திய பணத்தில் …

2,40,00,00,000 United States Dollar equals
1,71,86,04,00,000.00 Indian Rupee..

17,186 கோடி ரூபாய் .. அட இருந்துவிட்டு போகட்டும் .. நாட்டில நடக்காததா ..

வருடம் 1981 நான் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டு இருந்த பொது எனது அண்ணன் Renga Krishnan திருச்சி BHEL இல் வேலைக்கு சேர்ந்தான் சம்பளம் 1,800/- .. அன்று நான் மாதம் ஒரு முறை .. கோவில் வாசலில் இருந்த ஆவின் பாலகத்தில் .. பாட்டில் (சாக்லேட் , ஏலக்காய் )சுவைகளில் வரும் குளிர் பால் விலை ஒரு ரூபாய் .வீட்டில் கெஞ்சி கூத்தாடி வாங்கி சாப்பிடுவேன்

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

அவன் சொன்னான் .. என் சம்பளத்தில் மாசா மாசம் நீ 1800 பாட்டில் சாப்பிடலாம் என்று… அந்த பணத்தின் மதிப்பை சொன்னான் .. நான் அப்போதுதான் இவ்வளவு சம்பளமா என்று அசந்து போய் … அவனை நிமிர்த்து பார்த்தேன் !!!

அதே போல ..இவரின் சொத்தை பற்றி சொல்ல …நமது ஆறு கோடி தமிழர்களின் தேவையை சொல்லுகிறேன்

தமிழக நதிகள் இணைய 2750Cr
தமிழக சாலைகள் செப்பனிட 7939Cr விவசாய நுண்ணீர் திட்டமிட 1361Cr
சுகாதார வசதி தர 7050Cr

தற்போதைய தமிழக தேவை:19100Cr

இவர்களது பூம்புகார் ப்ரொடக்சன் மற்றும் முரசொலி பத்திரிக்கை 1970 திவால் ஆகி பின்னர் எம்ஜியார் ஜெயலலிதா பணம் வாங்காமல் நடித்து காப்பாற்றியதை பற்றி பல செய்திகள் உண்டு ..இப்படி உழைத்து முன்னேறிய இந்த குடும்பத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்க ..

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Related articles

Recent articles

spot_img