நாங்க என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?! யூ பீப்பிள் என்று சொல்வதற்கு?: கேட்டவர் தயாநிதி ஆயிற்றே!

Published:

dayanithi trbalu - 2026

“நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா.? சொல்லவே வாய் கூசுகிறது,
நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..?”- இது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய வார்த்தைகள் !!!

தலைமை செயலாளர் உங்களை மதிக்கவில்லை என்றால் அது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை.. அதற்கு ஏன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒப்பிட்டு அசிங்கபடுத்த வேண்டும் ??? இதைவிட கொடுமை ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால் கூட தீண்டாமை சுவர் என முழக்கமிடும் தமிழக ஊடகங்கள்,
எதெற்கெடுத்தாலும் சத்தம் போடும் தமிழகத்தின் சமூகநீதி காப்பாளர்கள், சாதி ஒழிப்பு போராளிகள் இப்போது சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே !!!
சரி தான் சுரணையை விட சோறு தான் முக்கியம் என நினைத்துவிட்டார்கள் போல! – என்று சமூக வலைத்தளங்களில் சாடுகிறார்கள் சாமானியர்கள்.

ஆனால், உலகத்தை உசுப்பேற்றி இன்று ரணகளம் ஆக்கியிருக்க வேண்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவனோ… கூட்டணி தர்மம் என்று சுட்டிக் காட்டி, செல்லமாய் கன்னத்தைக் கிள்ளுகிறார்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

இது குறித்து புதியதமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் ஷ்யாம் தனது டிவிட்டர் பதிவில்… இதற்காகத்தான் நாங்கள் எஸ்சி என்பதில் இருந்து வெளியேறுவோம்… என்கிறார்.

இது குறித்து பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா விடுத்த அறிக்கையில், தயாநிதியை சாடுகிறார்.

தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img