பாரதமாதா சிலை அவமதிப்பு: போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் அர்ஜுன் சம்பத்!

Published:

kanyakumari bharathmatha statue
kanyakumari bharathmatha statue

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதமாதா சிலை அவமதிப்பு விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் கூறியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட கண்டன அறிக்கை…

பாரதமாதா சிலை அவமதிப்பை கண்டித்து பாரதமாதாவை வழிபட்ட ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் மீதும், பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது!

பொய் வழக்கை வாபஸ் பெற்று, பாரதமாதா சிலை அவமதிப்புக்கு மன்னிப்புக் கோர இந்து மக்கள் கட்சி வேண்டுதல்# சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை! குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து தேச பக்தர்கள் இல்லத்திலும் பாரதமாதா திருவுருவ படம் வைத்து வழிபட வேண்டுகோள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைகுளம் காட்டுவிளை சந்திப்பில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள #பாரதமாதா #சிலையை பார்க்க விகாரமாக இருப்பதாக கூறி, தென்தாமரைக்குளம் அருகே புவியூரில் உள்ள #கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதலின்பேரில், கிறிஸ்தவ அமைப்பைச் சார்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கன்யாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் காவல்துறை அதிகாரிகளுடனும் வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையுடனும் அப்பகுதிக்குச் சென்று #பாரதமாதா #சிலையை துணியால் மூடி #பாரத #அன்னையை அவமதிப்பு செய்துள்ளார்.

விபரம் தெரிந்து அந்தப் பகுதியில் இந்து இயக்கத் தொண்டர்கள் ஒன்றுகூடி பாஜக மாவட்டத் தலைவர் திரு தர்மராஜ் அவர்கள் தலைமையில் பாரதமாதா சிலையை மூடியிருந்த துணியை அகற்றி வழிபாடு செய்தனர் மீண்டும் அப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் காவல்துறை அதிகாரிகளோடு வந்து சிலையை துணியைப் போட்டு மூடி அவமதிப்பு செய்ய முயற்சித்தனர் பாரதமாதா அவமதிக்க படுவதை தடுக்கும் நோக்கத்தோடு ஜனநாயக வழியில் சத்தியாக்கிரகப் போராட்டம் செய்த தேசபக்தர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் முழுக்க முழுக்க கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவரை விட கிறிஸ்தவ மிஷினரிகளின் தலைவர் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். உளவுத் துறையிலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கைப்பாவைகள் ஊடுருவியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் பாரதமாதா சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து நாடு முழுக்க உள்ள தேசபக்தர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இந்திய திரு நாட்டின் தென்பகுதியில் குமரி மாவட்டம் உள்ளது. குமரி மாவட்டம் பாரதமாதாவின் திருவடிகள் ஆகும். குமரி மாவட்டம் தேசிய சிந்தனை உள்ள தேசபக்தர்கள் நிறைந்துள்ள மாவட்டமாகும்.இந்தப் பகுதியில் பாரத அன்னைக்கு நேர்ந்து இருக்கின்ற அவமதிப்பு சகித்துக்கொள்ள முடியாததாகும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து மீண்டும் பாரதமாதா சிலை பொலிவுடன் திகழ்ந்திட உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். பாரதமாதா சிலை அவமதிப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதும், கிறிஸ்தவ மிஷனரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதத்தாயின் பக்தர்கள், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்து மக்கள் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாரதமாதா திருவுருவப்படம் வழங்கப்படும். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனில் பாரத மாதாவின் புகழ் காக்க, பாரதமாதா வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட இந்து மக்கள் கட்சி ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

#பாரத அன்னைக்கு சிலைவைக்க இனி ஒரு #சுதந்திர #போராட்டம் #தேவைப்படுமோ?

Related articles

Recent articles

spot_img