சோழவந்தானில் தலைவர் சிலைகள் மூடி இருப்பதால் பரபரப்பு!

புகார் பெட்டி மதுரை
madurai-chozhavanthan-leaders-statues
madurai-chozhavanthan-leaders-statues

மதுரை: சோழவந்தான் பஸ் நிலையம் முன்பாக சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுபாஷ் சந்திரபோஸ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத்தேவர் ஆகியோருடைய சிலைகள் எங்குமே இல்லாத அளவில் மூன்று சிலைகளும் ஒரே இடத்தில் உள்ளன

இங்குள்ள தலைவர்களுடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பார்வர்ட் பிளாக் கட்சி மறத்தமிழர் சேனை அமைப்பினர் உள்பட மற்ற கட்சியினரும் பொதுமக்களும் வருடந்தோறும் வந்து மாலை அணிவிப்பது வழக்கம்

இதேபோல் இந்த ஆண்டு இன்று மூக்கையாத்தேவர் 41 ஆவது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தலைவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்கள் தலைவர்கள் சிலைகள் உள்ள இடம் மூடியிருப்பதால் மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர்

இது குறித்து இதற்கான பொறுப்பாளர்கள் மற்றும் பேரூராட்சியில் கேட்டபொழுது சரியான பதில் வராததால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர்! மேலும், தலைவர் சிலையை அடைத்து இருக்கக்கூடிய கேட்டுக்கு மற்றொரு பூட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் இதனால் அப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.