தொடர் மழை! ஆனாலும் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து இல்லை! விவசாயிகள் கவலை!

Published:

parappalaru-dam-without-water
parappalaru-dam-without-water

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீரின் முக்கிய ஆதாரமாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை விளங்கி வருகிறது.

ஆண்டுதோறும் பெய்யும் தென் மேற்குப் பருவ மழையால் இந்த அணை நிரம்பி ஒட்டன்சத்திரம் விருப்பாட்சியில் உள்ள தாழையூத்து அருவியின் மூலம் தாசரி பட்டி முத்து பூ பாலசமுத்திரம், விருப்பாச்சி பெருமாள் குளம், தங்கசியம்மபட்டி சடையன்குளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராம சமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ,ஆகிய பகுதியில் உள்ள 6 க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்றடையும்.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதி அடையும். பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 259 ஏக்கர் நிலங்களும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வந்தது. சத்திரப்பட்டி,விருப்பாச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.

இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார சுற்றியுள்ள பகுதிகளில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது. கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய பகுதிகளில் சுமார் 47.2mm அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இருப்பினும் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை வனப் பகுதியில் அமைந்துள்ளதால் நீரின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி இதில் தற்போது நீர் இருப்பு 65 அடி இதில் 3 கன அடி நீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இதில் குறிப்பாக 30 அடி சேறும் சகதியும் உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில் கூறியதாவது ஒட்டன்சத்திரம் பாச்சலூர், சிறுவாட்டு காடு, வடகாடு, கே சி பட்டி தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் மழையின் அளவு குறைவாக இருப்பதால் மேற்படி அணைக்கு வரத்து இல்லை என தெரிவித்தனர்.

தொடர் மழை பொழிவு இருப்பினும் கணிதத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பரப்பலாறு அணை நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img