நடிகை ராதிகா ஆப்தேவின் பாதங்களை வருடி ‘அடி’ வாங்கியவர்: யார் அந்த பிரபல நடிகர்?

Published:

radhika apte - 2026

மும்பை: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தென்னிந்திய பிரபல நடிகரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அடித்துவிட்டதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பதை அறிய போட்டா போட்டி நடக்கிறது.

திரையுலகில் இப்போதெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதுவும் டிவிட்டர் சமூக வலைத்தளம் ஒன்று இருப்பதால், மனத்தில் பட்டதை தைரியமாக வெளிப்படுத்தி விடுகின்றனர் நடிகைகள்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடிகைகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறும் சிலர், ‘கேஸ்டிங் கௌ’ என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டதாக வருத்தப் படுகின்றனர். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் நடிகைகள் சிலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில், பாலிவுட் நடிகை நேஹா துபியா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. இவர் அந்த நிகழ்ச்சியில், தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர், ’வெற்றிச்செல்வன்’, ‘தோனி’, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, உலா என, 5 தமிழ்ப் படங்களிலும், ’ரத்த சரித்திரா’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துள்ளார்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

அவர் கூறியது, தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர் ஒருவர் முதல் நாள் ஷூட்டிங்கில் என்னுடைய பாதங்களை வருடினார். கோபத்தில் அவரை ஓங்கி அடித்து விட்டேன். அவரை இதற்கு முன்பு ஒருமுறை கூட நான் சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், ராதிகா ஆப்தேவிடம் பாலியல் சில்மிஷம் செய்த அந்த பிரபல நடிகர் யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் யார் என்று அறிவதில் பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

Related articles

Recent articles

spot_img