December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

வலது காலா… இடது காலா..? முடமான காலா..? ரஜினிக்கு ஒரு மானசீக மடல்!

kaala review 2 - 2025

மதிப்பிற்குரிய ரஜினி அவர்களுக்கு,

தங்களுடைய காலா படம் வெளியாவதற்கு முன் அதனை முழு தோல்வி அடையத் தமிழ் தேசியவாதிகள், திக , திராவிட கட்சிகள் , பெரியாரிய இயக்கங்கள் , இடதுசாரி இயக்கங்கள், TTV விசுவாசிகள் என்று ஒரு பெரும் கூட்டமே மறைமுகமாக வேலை செய்தது இது உண்மை. மேலும் படம் வெளியான உடன் சில மணி நேரத்தில் online வெளியானது அதன் லிங்க் அனைத்து மக்களுக்கும் அனுப்பி வைத்தது இந்த கேடு கெட்ட கூட்டம்.

ஆனால் அதே நேரம் ஒரு பக்கம் ஆன்மீக அரசியலை நீங்கள் அறிவித்த நாள் முதல் திராவிட அரசியலுக்கு மாற்றாக தங்களுக்கு ஆதரவாக ஒரு பெரும் கூட்டம் உங்கள் காலா படம் வெற்றி அடையவேண்டும் என்று தீவிரமாக ஆதரவைத் தெரிவித்தனர். ஆனால்…

என் வாசகர்  வட்டத்தில் சிங்கப்பூர் , நியு ஜெர்சி தொட்டு அனைத்து நாடுகளிலும், நகரங்களிலும் காலா டிக்கெட் வாங்கி அதைப் புகைப்படமாக வெளியிட்டு சந்தோசமாக திரைப்படம் பார்க்க சென்றனர் – ஆனால் திரும்பி வந்து மனம் வேதனை அடைந்ததாகக் கூறினார். ஏன் என்றால் அதில் இந்து மத கடவுள்களை மறைமுகமாகத் தாக்கினர் … நரேந்திர மோடி அவர்கள் மீதும் மறைமுகமாகத் தாக்குதல். தேவை இல்லாமல் இந்த ரஞ்சித் வைத்திருப்பது எரிச்சலைத் தருகிறது என்று கூறினார், மறைமுகமாகக் குறிப்பிட்ட ஜாதி கட்சியின் கருத்துக்களைக் காணமுடிந்தது என்றும் கூறினார்.

எனவே படத்திற்கு செல்ல வேண்டாம் , தேவை இல்லாத மனக் காயம் தான் என்று அவர்களும் வெளிப்படையாகக் கூறிவிட்டனர். சிலர் ஜாதி தூக்கி பிடிப்பது தான் படத்தின் கருவாகவே இருக்கு இது நல்ல விஷயம் அல்ல. ஒரு படம் சகித்துக் கொள்ளலாம் எந்நேரமும் இந்த ரஞ்சித் என்ற இயக்குநருக்கு இதே வேலையாக போச்சு. எனவே படம் பார்க்க விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் இப்படியான காட்சிகள் வைப்பதன் மூலம் பிஜேபி சார்பில்லாதவர் என்று தங்களை காட்டிவிடலாம் என்றும் மதச் சார்பில்லாதவர் என்று காட்டவும் முடியும் என்று யாராது ஐடியா கொடுத்தனர் என்றால் – அது தவறு, அது தேவை இல்லாத முயற்சி என்பது என் எண்ணம். ஏன் என்றால் இன்று அது தான் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. படத்திற்கான உண்மை நிலவரத்தைக் கொஞ்சம் விசாரணை செய்யவும். அதன் உண்மை தெரியவரும்.

“படத்தை ஆதரித்த ஒருபக்க ஆதரவாளர்கள் வருத்தம் அடைய – இன்னொரு பக்கம் அப்படத்தை தோல்வி அடைய செய்த நபர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இது மிக விசித்திரமான நிலை”. ஆக புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்ன வென்றால் :

நிச்சயம் மிகப் பெரிய வருத்தம் அடைகிறேன்… ஒரு நூற்றாண்டாக இந்து மதம் மட்டுமே தொடர்ந்து பகுத்தறிவு என்ற பெயரில் தாக்குதல் நடத்துவார்கள் என்றால் “என் அம்மா கொண்ட நம்பிக்கை மீது காயபடுத்துவார்கள் என்றால்” அதை எதிர்த்து நிற்க எனக்கு என்றுமே தயக்கம் இருந்தது இல்லை. இவர்கள் பேசுவது மதச்சார்பின்மை இல்லை இவர்கள் பேசுவது அப்பட்டமான இந்து மத வெறுப்பு.

இதே ரஞ்சித் ஆரம்பித்து – விடுதலைச் சிறுத்தைகள் ஆளூர் ஷா நவாஸ் – இயக்குநர் அமீர் – திக வீரமணி யாருடனும் நான் மற்ற ஆப்ரகாம் மதங்களில் உள்ள குறைகள் அதன் கொடூரமான வரலாற்றை விவாதம் செய்ய தயார். இவர்கள் அதை பற்றி பேச திராணி உண்டா?. எல்லா மதங்களிலும் வளர்ந்து வந்த வரலாற்றில் குறைகள் உண்டு. ஆனால் அது முன்வைக்கும் ஆன்மீகம் பிடித்து சமூகம் நகர வேண்டும் என்பது தான் என் எண்ணம். ஆக…

ஒரு மதச்சார்பற்ற சிந்தனை என்பது எல்லா மதமும் அதன் நம்பிக்கைகளும் மதிக்கப்படவேண்டும் என்பது தானே சரியாக இருக்க முடியும். ஆனால் இங்கே ???? ஒரு இஸ்லாமியர் , ஒரு கிறிஸ்தவர் என்றால் அவர்கள் சிறுபான்மையினர் என்று அவர்கள் நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும் என்று பேசும் அதே வாய்கள் தான்- என் அம்மா கொண்ட நம்பிக்கை என்றால் ஏளனம் செய்வர்???? இதற்குப் பெயர் நடுநிலை???? இந்த படத்திலும் அதே தவறு நடந்துள்ளது. எனவே ஒரு பெரும் கூட்டத்தின் மனதை காயபடுத்துயுள்ளது இந்தக் காலா படம். காரணம் இது உங்கள் அரசியல் அறிவிப்பிற்குப் பிறகு வரும் படம் என்பதால்.

யாரையும் காயபடுத்த விரும்பாத ரஜினி இன்று அவரையும் அறியாமலேயே சில தவறான மனிதர்களால் பெரும் சமூகத்தை காயப்படுத்தியுள்ளீர் என்பது தான் உண்மை. மொத்த வாழ்வில் நீங்கள் சிறந்த ஆன்மிகம் விரும்பும் நபர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆக இதை கடந்து செல்லவே விரும்புகிறேன்.

ஏன் என்று சரியாக சொல்ல தெரியவில்லை “சோ அவர்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது”.

மற்றபடி நீங்கள் முதல்வராக ஆகவேண்டும் என்பது தான் என் எண்ணம். நீங்கள் தான் சரியான மாற்று என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

தங்களுக்கு நீடித்த உடல் நலம் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்… நன்றி…

-மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories