herbal rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மூலிகை சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
herbal rice - 2026

மூலிகை சாதம்
தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
கற்பூர வெற்றிலை (வெள்ளை வெற்றிலை) – 10,
வெள்ளை துளசி – ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி,
புதினா – ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
சீரகம் – 1 தேக்கரண்டி,
மிளகு – 1 தேக்கரண்டி,
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை
எல்லா இலைகளையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி, தனித்தனியே வைக்கவும்.
சீரகம், மிளகை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, முதலில் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு புதினா, அடுத்து கொத்தமல்லி, அதற்கடுத்து துளசி, கடைசியாக வெற்றிலை சேர்த்து கிளறவும்.
வெற்றிலை சேர்த்த பிறகு அதிகம் கிளறாமல், உதிராக வடித்து, ஆற வைத்த சாதம், பொடித்த சீரக-மிளகு பொடி, உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.
ஓரளவு சூட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

ALSO READ:  இந்திய விமானப் படை தினம்!