![எங்கே எங்கே என்று கேப்பாங்க.. ரங்கூன் புட்டு! 1 Rankin puttu](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/Rankin-puttu.jpg)
ரங்கூன் புட்டு
தேவையான பொருட்கள்:
வறுத்தரவை,வெல்லத்தூள் – தலா ஒரு கப்
வேகவைத்த பாசிப்பருப்பு – கால் கப்
நெய் – கால் கப்
முந்திரி – 10
காய்ச்சாத பால் – இரண்டரை கப் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – அரை கப்.
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு உருக்கி, முந்திரி சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் ரவை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுக்கவும். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் பாலைவிட்டு கொதிக்கவிடவும். அதனுடன் ரவை – தேங்காய்த் துருவல் கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வேகவைக்கவும். பிறகு, வெல்லக் கரைசல், பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.