தஞ்சை அருகே கூட்டு பாலியலில் ஈடுபட்ட 4பேர் கைது..

Published:

தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புது பஸ்நிலையம் நோக்கி நடத்தி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடியரசன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்ணை மறித்து பேசினார். ஏற்கனவே அறிமுகமான இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் மோட்டார் சைக்கிளில் ஏறு என கூறியுள்ளார்.இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததார். இதனால் அவரது செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

பின்னர் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் மேட்டுப்பட்டியை தாண்டியதும் கொடியரசன் மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதிக்கு திருப்பி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சத்தம் போட்டுள்ளார்.இருப்பினும் கொடியரசன் வலுக்கட்டாயமாக அங்குள்ள முந்திரி காட்டுக்கு இளம்பெண்ணை கடத்திச்சென்றார். அங்கு கொடியரசனின் நண்பர்களான சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 3 பேர் இருந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் கொடியரசனும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பிடித்துக் கொண்டு அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இங்கிருந்து ஓட முயன்றதால் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்த 4 பேரும் இளம்பெண்ணிடம் 4 பேரும் கூட்டு பாலியலில் ஈடுபட்டதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் இளம்பெண் தவித்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

4 பேரும் முந்திரி காட்டுக்குள் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்ப முடியாததால் உடனடியாக இளம்பெண்ணால் அங்கிருந்து வர முடியவில்லை.

நீண்டநேரம் கழித்து இளம்பெண்ணிடம் இப்போது வீட்டுக்கு போ… யாரிடமாவது சொன்னால் நடப்பதே வேறு என்று மீண்டும் 4 பேரும் மிரட்டல்விடுத்துள்ளனர்.

இதையடுத்து முந்திரி தோப்பில் இருந்து நடந்தே வீட்டுக்கு வந்த இளம்பெண் இதுபற்றி தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பின்னர் வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து கொடியரசன், சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

images 14 2 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img