சனிக்கிழமை திருடர்கள்! இராமநாதபுரத்தில் கைது !

கிரைம் நியூஸ்

kaithu e1563169848461 - 2026திருப்புலாணி போலீஸாருக்கு, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவில் செல்போன், கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் அதிகளவில் திருடு போவதாகத்  புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

சனிக்கிழமை திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமராவை கிராமங்களின் முக்கிய இடங்களில் வைத்து திருடர்களைப் போலீஸார் தேடி வந்தனர்.labtop1 - 2026

கடந்த சனிக்கிழமை இரவு திருப்புலாணியை அடுத்துள்ள குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டி ஒன்றில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு லேப்டாப், 10,000 பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளார்.

இது அங்கிருந்த  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து திருப்புலாணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது சிசிடிவி-யில் பதிவான நபர், இதேபோல் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் திணைகுளம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடியபோது அங்குள்ள சிசிடிவி-யில்  காட்சியில் உள்ள அதே நபர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து திருடனின் புகைப்படங்களை வைத்து அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட திருடன் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிற்பதாக தகவல் வந்தது. போலீஸார் அங்கு சென்றனர். கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது,

saturday thirudarkal - 2026காவல் துறையினரைக் கண்டதும் திருடர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைத் துரத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னசேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அழகன்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன், முசிறியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூவருக்கும் திருச்சி சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருட்டின்போது செல்போன், லேப்டாப், கேமரா ஆகியவை மட்டும் குறி வைத்து திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சனிக்கிழமை திருடர்கள் மூவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.