8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில்…!

கல்வி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
dpi office chennai - 2026

எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆனால் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் எட்டாம் வகுப்பு தேர்வை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த பள்ளிக்கல்வித் துறையின் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பத்தாம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க அட்டவணை தயாரித்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.