தெலங்கானா வழியில் தமிழகம்! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து! அனைவரும் தேர்ச்சி!

கல்வி சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
edappadi video conference1

தெலங்கானா மாநிலத்தைப் போல் தமிழகத்திலும் பொதுத் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில்…

வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளது! விடுபட்ட 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதம் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வருகைப்பதிவின் அடிப்படையில் மாணவர்களுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பின்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.

மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப் படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க 11ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகள் ரத்து செய்யப் படுவதாகவும், 12ம் வகுப்பை பொறுத்தவரை விடுபட்ட மாணவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மறு தேர்வு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நோய்த் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால் தேர்வுகள் ரத்து செய்யப் படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டதும், வரும் ஜுன் 15இல் தேர்வுகள் நடத்த அனுமதிக்கப் பட மாட்டாது என்று நீதி மன்றம் கூறியதும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.