+2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் அதிக தேர்ச்சி!

கல்வி தமிழகம்
exam 2

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 89.41% தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் வழக்கம்போல மாணவர்களை விட அதிகமாக 94.80% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவியரின்‌ எண்ணிக்கை 4,24,285 என்றும், மாணவர்களின்‌ எண்ணிக்கை 355,646 என்றும், அதில் பொதுப்‌ பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 7,28,516 என்றும், தொழிற்பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 51,415 என்றும் குறிப்பிடத்தக்கது

resalt

மேலும் மொத்தம் 7127 பள்ளிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில் அவற்றில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ எண்ணிக்கை 2120 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட அளவிலான தேர்ச்சி பட்டியலில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியை பெற்று தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.99% தேர்ச்சியை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 2120 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதுத்தவிர 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 62 கைதிகளில் 50 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.