பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம்: தமிழக அரசு!

கல்வி சற்றுமுன் தமிழகம்
tamilnadu secretariat - 2026

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு பெற்றோர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த அறிவிப்பு ரத்தானது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தற்போது தான் கட்டுக்குள் இருக்கிறது, அடுத்து எப்போது வேண்டுமானாலும் கொரோனா இரண்டாம் அலை வீசும் என்பதால் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை திறக்காமல் இருக்கிறோம். பள்ளிகளைத் திறக்க மேலும் காலதாமதம் ஆகும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.