அண்ணாத்தே படம் சொன்ன தேதிக்கு வெளியாகும் – எப்படி தெரியுமா?

சினி நியூஸ் சினிமா

annathe

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க துவங்கிய படம் அண்ணாத்தே. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட பலரும் நடித்து வந்தனர். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்படத்தை 2021 ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால், ரஜினி இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. விரைவில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மீண்டும் படப்பிடிப்பு துவங்கினால் ஒரு குழு ஏற்கனவே எடுத்த காட்சிகளை போஸ்ட் புரடெக்‌ஷன் செய்வதாகவும், ஒரு குழு படப்பிடிப்பில் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். 

இதன் காரணமாக அண்ணாத்தே படத்தின் பணிகள் விரைவில் முடிவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.