ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பட நாயகி தன் திருமணத்திற்குஒரு நல்ல நாள் பார்த்து சொல்வாங்களாம்!

சினி நியூஸ் சினிமா

ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா. இருவருக்குமான திருமணத் தேதி முடிவு செய்யப்படவில்லை.

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை நிஹரிகா கொனிடெலா.நிஹரிகா தெலுங்கு , மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள் ஆவார்.

இந்நிலையில் நடிகை நிஹரிகா தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவர் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா. இருவருக்குமான திருமணத் தேதி முடிவு செய்யப்படவில்லை.

eeb399acc0e0b07707562c465f6eb7ef - 2026

இது பெற்றோர்களால் பேசி முடிக்கப்பட்டுள்ள திருமணம் என தெரிகிறது . ஆகஸ்ட் மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தெலுங்கு சினிமாவில் பேசப்படுகிறது. இதனிடையே திருமணம் நிச்சயம் பண்ணிய பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கி இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசி கொண்டு வருகின்றனர்.

f04d3e2dc8e71ee05492c5764b82c0d9 - 2026
மேலும் இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளை நிஹரிகாவின் குடும்பத்தினர் மும்முரமாக கவனிக்க தொடங்கி உள்ளனர்.
 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.