பணிக்கு வராத 2,710 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
teachers strike - 2026

சென்னை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:

ஏற்கெனவே 535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கு வராத 2710 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பள்ளியில் மீண்டும் பணியாற்ற முடியாது. அதே நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுட்டிக் காட்டும் பள்ளியில் தங்கள் பணியைத் தொடர முடியும்.

இவ்வாறு தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.