சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வுகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அடுத்து, மே 9ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது. மே 7ஆம் தேதி வெளியாகலாம் என்று முன்னர் தகவல் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 67 மையங்களில் நடந்து முடிந்து, பாடவாரியாக மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதிப்பெண் விவரங்கள் மே 1ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. எனவே, மே 9ஆம் தேதியோ அல்லது அதற்கு இரு தினங்கள் முன் மே 7ஆம் தேதியோ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Posts by தினசரி செய்திகள்:
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!


