jobs - 2026

மத்திய சுகாதார அமைச்சகத்தில் பணி!

வேலைவாய்ப்பு இந்தியா
jobs - 2026

மத்திய சுகாதார அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள பணிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்காக எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தகுதி வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறது.

அந்த வகையில், கம்யூனிகேஷன் தகவல்-ஒளிபரப்பு அமைச்சகத்தில் 4 நிர்வாக அதிகாரி பணியிடங்கள், யுனானி, ஆயுஷ் இயக்குநரகம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் 25 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நிர்வாக அதிகாரி பணியில் சேருவதற்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கலை, வணிகம், அறிவியலில் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.

5 வருட பணி அனுபவம் அரசு அல்லது அரசு அமைப்பு அல்லது நிதித்துறையில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுனானி மருத்துவத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான கடைசி நாள் வரும் 17ஆம் தேதி ஆகும்.

பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என இந்திய அரசின் யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.