ஹைதராபாதில் ஏடிஎம் கார்டுகள் க்ளோனிங் செய்யும் கூட்டத்தை போலீஸார், கைது செய்தனர்.
ஏடிஎம் கார்டுகளை கிளோனிங் செய்யும் கூட்டத்தை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். ஒடிசாவை சேர்ந்த 3 பேர் சேர்ந்த குழு போலி கார்டுகளை தயார் செய்து ரூ13 லட்சங்களை திருடியுள்ளதாக கண்டுபிடித்தனர்.
ஹைதராபாதில் உள்ள பல ரெஸ்டாரண்ட், பப்புகளில் வேலைசெய்து வரும் மூவர் ஏடிஎம் கார்டுகளை கிளோனிங் செய்து பணத்தை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் போலீசார் கூறினர்.
‘கச்பௌலி’ ஹெச்டிஎஃப்சி பேங்க் மேனேஜர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். பத்து லட்சம் ரூபாய் பணம், ஆறு மொபைல்போன்கள், இரண்டு லேப்டாப்புகள், க்ளௌனிங் இயந்திரங்களை கைப்பற்றினர்.
சைபர் கிரைம் டிசிபி ரோகிணி பிரியதர்ஷினி இதுகுறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். இதுவரை 140 ஏடிஎம் கார்டுகளை குற்றவாளிகள் குளோனிங் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் முக்கிய குற்றவாளி பிரபுல் குமார் ஆன்லைனில் ஸ்கிமர், க்ளௌனிங் மெஷின்களை வாங்கி வாங்கியுள்ளதாக கூறினார்.
மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் பப்புகளில் இந்த குற்றவாளிகள் வெயிட்டர்களாக சேர்ந்துள்ளார்கள். அங்கு வரும் கஸ்டமர்கள் பில் செலுத்தும் சமயத்தில் தம்முடன் எடுத்துச் சென்ற ஸ்கிமர் மிஷின் உதவியோடு கார்டுகளின் டேட்டாவை திருடி அதன் மூலம் பணம் கொள்ளை அடித்துள்ளதாக விளக்கினார்.