எங்கு பார்த்தாலும் கரோனா நோய் அச்சம் உள்ளது. காலேஜுக்கு போகாதே என்றார் அம்மா. அதற்குள்ளாகவே இளைஞனைப் பின்தொடர்ந்த மரணம்.
எங்கு பார்த்தாலும் கரோனாவாக உள்ளது. காலேஜுக்கு போக வேண்டாம் என்று மகனிடம் கூறினார் தாய். இன்று ஒரே ஒரு நாள் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறினார் இளைஞன். சற்றைக்கெல்லாம் ரயில் வண்டி வடிவத்தில் வந்த எமன். நெல்லூரில் நிகழ்ந்த சோகம் இது!
எங்கு பார்த்தாலும் கரோனா அபாயம் உள்ளது என்றும் காலேஜுக்கு போகவேண்டாம் என்றும் தடுத்தார் அம்மா. இன்று ஒருநாள் போய் விட்டு வந்து விடுகிறேன் அம்மா. நாளையிலிருந்து போக மாட்டேன் என்று அந்த இளைஞர் வீட்டிலிருந்து கிளம்பி காலேஜுக்கு சென்றார்.
அம்மாவிடம் போய் வருகிறேன் என்று டாடா கூறி விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இளைஞனை ட்ரெயின் வடிவத்தில் வந்த மரணம் பின்தொடர்ந்தது. நெல்லூரில் நடந்த சோகத்தால் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
நெல்லூர் நகரில் சங்கம் என்ற இடத்தில் தெற்கு வீதியைச் சேர்ந்த ஆசிரியர் டீ. நரசிம்ம ரெட்டி, சுனிதா தம்பதிகளுக்கு ராம் பிரதாப் ரெட்டி மகன். நெல்லூர் விஆர் லா காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் அதிகம் இருப்பதால் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தாய் பிரதாப் ரெட்டியிடம் கூறி தடுத்துள்ளார். நாளையிலிருந்து போக மாட்டேன். இன்று ஒரு நாள் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறினான் மகன்.
வீட்டில் இருந்து பஸ்ஸில் கிளம்பி நெல்லூர் சென்று அங்கிருந்து மினி பைபாஸ் ரோட்டில் இறங்கி நடந்து காலேஜுக்கு கிளம்பினார் .விஜய் மஹால் அருகில் ரயில் தண்டவாளத்தை தாண்டி கொண்டிருந்தபோது ஹெட் போன் போட்டுக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே சென்றதால் ரயில் வரும் சத்தத்தை கவனிக்கவில்லை. கண்மூடித் திறக்கும் நேரத்தில் விபத்து நேர்ந்து விட்டது. வேகமாக வந்த ரயிலில் மோதி இடித்துவிட்டது. அங்கேயே மரணமடைந்தார்.
செய்தி அறிந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி தந்தைக்கு செய்தி அறிவித்தார். மகனை உயிரற்ற சடலமாக பார்த்த அந்த தந்தை கண்ணீரால் கலங்கினர். படித்து வரும் மகன் உத்தியோகத்தில் சேர்ந்து தமக்குத் துணையாக இருப்பான் என்று நினைப்பதற்குள் இவ்வாறு இறந்து போனது தீவிரமான சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.