தாய் மீது அதிக அதிக அன்பால் தற்கொலை செய்துகொண்ட மகன். கண்ணீரை வரவழைக்கும் செல்பி வீடியோ.
ராகேஷின் தாய் லட்சுமி சென்ற வருடம் கேன்சர் நோயால் இறந்து போனார். தாய் மீது உள்ள அதிகப்படியான அன்பு காரணமாக ராகேஷ் தாயின் மரணத்தை தாங்க இயலாது போனார்.
ராகேஷ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். “ராஜன்னா சிருசில்லா” மாவட்டத்தில் சோகம் சூழ்ந்தது. தாயின் மரணத்தை தாங்க முடியாத இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு அந்த இளைஞர் ஒரு செல்பி வீடியோ எடுத்து அதை தன் நண்பர்களுக்கு அனுப்பினார். வருத்தத்தோடு அந்த இளைஞர் கூறிய சொற்கள் இதயத்தை கலக்குகின்றன. தன் தாய் கனவில் அடிக்கடி வருவதாகவும், தாயை மறக்க முயலவில்லை என்றும், தனக்கு வாழ்க்கை மீது ஆசை இல்லை என்றும் செல்பி வீடியோவில் கூறுகிறார்.
உள்ளம் உருக்கும் இந்தச் சம்பவம் ராஜன்னா சிருசில்லா மாவட்டம் இல்லந்தகுண்டா மண்டலம் அனந்தாரம் கிராமத்தில் நடந்தது. ராகேஷின் தாய் லக்ஷ்மி சென்ற ஆண்டு கான்சர் நோயால் மரணம் அடைந்தார். அவர் மீது அதிக அன்பு கொண்ட ராகேஷ் தாயின் மரணத்தை தாங்க இயலாமல் போனார். ராகேஷ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ரொட்டி கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
சொந்த ஊருக்குச் சென்ற ராகேஷ் தன் நண்பர்களோடு தன் தாய் இல்லாத தனிமை குறித்து பேசியுள்ளார். தன் மன வேதனையை அவர்களிடம் வெளியிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு கிராமத்திற்கு சென்ற ராகேஷ் ஊர் எல்லையிலுள்ள ‘பிக்குவாகு’ கால்வாய் அருகில் தன் தாயை தகனம் செய்த இடத்திற்கு சென்றார். அங்கேயே செல்பி வீடியோ எடுத்து விட்டு பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
இந்த விஷயத்தை கவனித்த கிராமத்தார் உடனுக்குடனாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பாகவே ராகேஷ் இறந்து போனார்.தற்கொலை செய்துகொள்வதற்கு முன் செல்பி வீடியோவில் தன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
” நான் இறந்து போகிறேன். எனக்கு வாழ வேண்டுமென்று தோன்றவில்லை. உன் அருகிலேயே வந்து விடுகிறேன், அம்மா. தங்கை! மிஸ் யூ ரம்யா! தந்தையை நன்றாக பார்த்துக்கொள். அப்பா ! குடிக்காதே. ரம்யாவுக்கு நல்லவிதமாக திருமணம் செய். நான் இறந்த பின்பு அழாதே!” என்று ராகேஷ் செல்ஃபி வீடியோவில் கூறியுள்ளார்.