மூக்கு வெளித்தெரிய மாஸ்க் போடுவது… ‘அதை’ மூடாமல் ஜட்டி போடுவது! வைரல் போட்டோ!

Published:

mask-picture
mask-picture
  • மூக்கை விட்டு விட்டு மாஸ்க் அணிந்து கொள்வது…. அண்டர்வேர் போட்டுக் கொண்டாலும்…. ஹாஹாஹா… காக்கிநாடா போட்டோ வைரல்.
  • மூக்குக்கு கீழே மாஸ்க் போடுபவரா? அப்படியானால் இந்த படம் நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டியது.
  • இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் மூளை ஸ்தம்பிப்பது உண்மை.

கோதாவரி மாவட்டம் என்றால் கிண்டலுக்கு மறுபெயர். எது பேசினாலும் அவர்களின் பேச்சில் பேச்சு சாமர்த்தியம் முகத்தில் அடித்தாற் போல் தெரியும். சங்கோஜம் இல்லாமல் சொல்ல வந்த விஷயத்தை கிண்டலோடு சேர்த்து செல்வதே அவர்களுக்கு வழக்கம்.

இதோ இந்த போட்டோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். ஏனென்றால் மக்களுக்கு சாதாரணமாகச் சொன்னால் புரிவதில்லை. அதனால் ஒரு மனிதருக்கு இந்த ஐடியா வந்தது. இதை பார்ப்பதற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் உண்மையை கண்ணுக்குத் தெரியும்படி பளிச்சென்று விவரிக்கிறது.

காகிநாடாவில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் தென்படும் இந்த சித்திரம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறிவருகிறது. கரோனா வைரஸ் பின்னணியில் மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டி வந்துள்ளது. ஆனால் நிறைய பேர் மாஸ்க்கை காதுக்கு தொங்கவிட்டுக் கொண்டு மூக்கையும் வாயையும் காற்றில் விட்டு விடுகிறார் கள். தாம் மாஸ்க் அணிந்து உள்ளோம் என்ற பிரமையில் வாழ்கிறார்கள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
mask-pic
mask-pic

இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கூட ஆபத்தே. அப்படிப்பட்ட மனிதர்களின் மென்டாலிட்டியை யாரும் மாற்ற முடியாது. நாம் எத்தனை விவரித்து கூறினாலும் புரிவது போல் நடித்து மீண்டும் அதே வேலையை செய்வார்கள்.

அப்படிப்பட்ட மனிதர்களை பார்த்துப் பார்த்து எரிச்சலடைந்ததாலோ என்னமோ ஒரு மனிதன் முகத்துக்கு அணியும் மாஸ்கினை அண்டர்வேரோடு ஒப்பிட்டு இந்த போஸ்டர் தயாரித்துள்ளார்.

அதில் உள்ள ஒரு படத்தில் மாஸ்க் மூக்கின் கீழ் இருக்கும். அதன் பக்கத்தில் இரண்டாவது படத்தை பார்த்தால் மட்டும் தலை சுற்றி மைன்ட் பிளாக் ஆகிவிடும். அந்த இரண்டாவது படம் அண்டர்வேரை பாதி அணிந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை பளிச்சென்று காட்டுகிறது. அதனை இவ்வாறு கூறுவதை விட படத்தைப் பார்த்தால் புரிந்து போகும்.

எது எப்படியானாலும் சொல்ல வந்த விஷயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி விட்டார்கள் என்று தோன்றும். மாஸ்க் அணியும் போது தவறாமல் மூக்கையும் வாயையும் மூடும்படி அணிய வேண்டும். இல்லாவிட்டால் காற்று புழுக்கமாக இருக்கிறது என்று விட்டுவிட்டால் அந்த காற்றினாலே வைரஸ் கூட உடலுக்குள் புகுந்துவிடும். தஸ்மாத் ஜாக்கிரத்தை!!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img