நடிகர் ரஜினியுடன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை!

Published:

rajini-prayer-for-his-fan-darshan
rajini-prayer-for-his-fan-darshan

நடிகர் ரஜினிகாந்த் உடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து இன்று மாலை பரபரப்பான தகவல்கள் வெளியாகின. மாறி வரும் அரசியல் சூழ்நிலையில், தனது உடல் நலன் குறித்த தகவல்களை ரஜினிகாந்த் பொதுவெளியில் கூறிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ALSO READ: அது என் அறிக்கையல்ல… ஆனால் மருத்துவ தகவல்கள் உண்மை: ரஜினி ட்வீட்!

இது குறித்து வெளியான தகவல்: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்றர். அங்கே சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, ரஜினியின் உடல் நலம், அரசியல் சூழல், அரசியல் செயல் திட்டம் குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் தகுந்த நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றும் கூறி இருந்தார். இந்தப் பின்னணியில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி அவருடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img