அது என் அறிக்கையல்ல… ஆனால் மருத்துவ தகவல்கள் உண்மை: ரஜினி ட்வீட்!

சற்றுமுன் தமிழகம்
rajinikanth
rajinikanth

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அவர் கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரீதியிலும் ஓர் அறிக்கை சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது குறித்து இன்று ரஜினி ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அதில்… எனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல ! தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்! சமூக வலைத்தளத்தில் பரவும் கடிதத்தில், தன்னுடைய உடல்நிலை, மருத்துவர்கள் ஆலோசனை பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையே என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையில் வீண் வதந்திகளுக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம், அவர் அரசியலுக்கு இன்னும் முழுக்கு போடவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.