முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்: பேரையூர் பேரூராட்சி நடவடிக்கை!

சற்றுமுன் மதுரை
police in madurai
கோப்பு படம்:

மதுரை மாவட்டம், பேரையூர் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்ற 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி நிர்வாகமானது, தினசரி ஒலி பெருக்கி மூலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்னமும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சாலையில் தினசரி நடமாடி வருகின்றனர்.

இதனால், மாவட்ட நிர்வாகம், முகக் கவசம் அணியாமல் வருபோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாம். இதையடுத்து, மதுரை மாவட்டம் பேரையூரில் பேரூராட்சி சார்பில் முகக் கவசம் அணியாமல் வந்த 54 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதித்தனர்.

இதே போல் போலீஸாரும் முகக் கவசம் அணியாமல் தெருக்களில் சென்ற 40 பேரை பிடித்து வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை அருகே கருப்பாயூரணி, அண்ணாநகர், சோழவந்தான், தேனூர், பரவை, சமயநல்லூர், குருவித்துறை, காடுபட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொது மக்கள் பலர் இன்னமும், முகக் கவசம் அணியாமல் சாலைகளில் நடமாடுவதை காணமுடிகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.