
பல ஆண்டுகளாக நடந்து வரும் திருப்பணியில் இன்று அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தி சிலைபிரதிஷ்டை நடைபெற்றது.
உசிலம்பட்டி தாலூகா வாலாந்தூர் முதல் நாடு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் கடந்த மூன்று! ஆண்டுகளாக பழைய கோயிலை இடித்து புதிய கோயில் ராஜகோபுரத்துடன் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது..இதில் இன்று நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது… மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

2012 ல் திருப்பணிகள் துவங்கியது..இன்று நந்தி சிலையை பீடத்தில் மேல் தூக்கி வைத்துள்ளனர்…மற்ற வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இக்கோயிலில் எட்டு ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.இன்னமும், பணிகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் எனத் தெரிய வருகிறது. தற்போது, இயந்திரம் மூலம் பெரிய நந்தி சிலை கோயில் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை