
மதுரை அரசு மருத்துவமணை கொரோனா நோய் தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு , மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை கருவிகளை, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அர்ப்பணித்து பேசிய போது…
மதுரை நகர் மக்கள் யாரும் தேவையில்லாமல் தெருக்களில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் இன்றி வருவோரை, போலீஸார் பிடித்தால் ரூ. 100 அபராதம் செலுத்த வேண்டி வரும். உங்கள் வெளியாட்கள் யார் வந்தாலும் கை மற்றும் கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே அனுமதியுங்கள் என்றார்.
மாநகராட்சி ஆணையர் விசாகன் பேசியது: மதுரை நகரில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் விரைந்து செய்யப்பட்டு வருகிறது. வெளியாட்கள் வந்தால் அவர்களை வீட்டில் வாசலிலே சுத்தம் செய்து கொண்ட பின்னரே அனுமதியுங்கள்.
இவ்வாறு செய்வதால் முதியவர்களை தொற்றிலிருந்து காப்பாற்றலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை டீன் சங்குமணி, மாவட்ட ஆட்சியர்வினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை