ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி

உலகம் சற்றுமுன்

putin - 2026

ரஷ்யாவில் அதிபர் புதினின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. புதின் உள்பட 8 பேர் அதிபர் தேர்தலுக்கான களத்தில் இருந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்றிரவு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்த தேர்தலில் புதின் வெல்வார் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி புதின் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதின் இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதின் இந்த தேர்தலில் 75%க்கும் அதிகமான வாக்குகளை பெற்று அபாரமான வெற்றியை பெற்றுள்ளார். புதினின் இந்த வெற்றியை அவரது ஆதரவாளார்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.