விளம்பரம்… வளரும் குழந்தைகளிடம் மூட நம்பிக்கையை வளர்க்கலாமா?

உரத்த சிந்தனை துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
false-hope-in-children

வளரும் பிள்ளைகளிடம் மூடநம்பிக்கையை வளர்க்கலாமா விளம்பரம்?

“முகம் காட்டினால் போதுமே நல்லது நடக்குமே” என்ற பின்னணிப் பாடலோடு விளம்பரம் தொடங்குகிறது.

ஒரு சிறுமி “மெம்மீ! மெம்மீ!” என்று அழைத்துக் கொண்டே வருகின்றாள்.

“இன்றைக்கு என்ன?” என்று கேட்கிறாள் அந்த மம்மி.

“இன்று எங்களுக்கு மியூசிக் காம்பெடிஷன். உங்கள் முகம் எங்களுக்கு ரொம்ப லக்கீ!” என்கிறாள் சிறுமி.

அதோடு அவள் தன் நண்பர் கூட்டத்தையும் அழைத்து வருகிறாள். தன் தாயின் முகத்தைப் பார்த்த பின் போட்டிக்குச் சென்றால் வென்றுவிடலாம் என்று ஒரு எண்ணத்தை அவர்களிடமும் விதைக்கிறாள்.

இதுபோன்ற விளம்பரங்களால் வளரும் தலைமுறை போட்டிக்குத் தயாராகாமலே ஒரு பெண்ணின் முகத்தைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தால் வென்றுவிடலாம் என்று எண்ண மாட்டார்களா?

இதைப் பற்றிய சமூக ஆர்வலர்கள் ஏன் வாய் திறப்பதில்லை? இந்த விளம்பரத்தைத் தடை செய்ய வேண்டாமா? குளியல் சோப்பை விற்பதற்கு இதைவிட வேறு நல்ல ஆலோசனை அவர்களுக்கு எழவில்லையா? குழந்தைகளை ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.