December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

‘வரலாற்றுப் பிழை செய்யவேண்டாம் திருமாவளவன்…’: சொன்னீர்களா வன்னியரசு..?!

thirumavalavan srilanka rajapakshe - 2025

முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வன்னி அரசு,

“நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர். பண்பாடு மிக்க, மனிதநேயமிக்க மனிதர். நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும் சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர்.

vijaysethupathi1 e1564390776897 - 2025அப்படிப்பட்டவர் முத்துயா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர். தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி ‘தனக்கு தமிழ் தெரியாது” என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டிருந்த போது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர். இதை விட கொடுமை தமிழினப்படுகொலைக்கு பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர்.

அதுமட்டுமல்லாது, தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் ‘தங்கல்லை” என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து இருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, “அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” என்று
முத்தையா முரளிதரன் பாராட்டினார்.

muthaia muralidaran - 2025இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள்.

ஒரு தமிழினத் துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக-நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று பிழையாகத்தான் முடியும்” என்று வன்னி அரசு தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். thirumavalavan srilanka rajapakshe - 2025

அதற்கு சிலர் பின்னூட்டமும் இட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்க மறந்ததை நாம் கேட்டு வைப்போம். அதே பேஸ்புக்கில், இந்தப் படங்களுக்கு பதில் சொல்லும் வகையில்… திருமாவளவனைப் பார்த்து இதே அறிவுரையும் கேள்வியும் கேட்டிருக்கிறீகளா வன்னியரஷு..?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories