6. ஹாதிகும்பா கல்வெட்டும் தமிழகமும்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஹாதிகும்பா கல்வெட்டு பெரும்பாலும் காரவேல மாமன்னர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கத்திய இந்தியாவில் பெரிதும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவர்களுடைய நட்பரசர்கள்மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.
சதகர்ணி என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது ஸ்ரீ சதகர்ணி அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சதகர்ணி என்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். மற்ற சதகர்ணிகள் தம் பெயருக்கு முன்னால் தம் தாயாரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு ஸ்ரீ சதகர்ணியிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தக் கணிப்பு காரவேலரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. கௌதமி புத்ர சதகர்ணி, வசிஷ்டபுத்ர புலுமாயி போன்ற சதகர்ணிகளைப் பற்றி பள்ளியில் படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.
தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகள்
இந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர் (சதம்-நூறு, கர்ணி-கன்னர்) என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள் பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.
தலைமேல் குரங்கு
நான் உதயகிரி மலையில் உள்ள குகைகளைப் பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்து, கந்தகிரி மலையி ஏறும்போது ஒரு குரங்கு என் தலையில் ஏறி அமர்ந்து விட்டது.
உதயகிரி, கந்தகிரி மலைகளையும் அதில் உள்ள குகைகளையும் பார்க்க சுமார் நான்கு மணி நேரம் ஆகலாம். பெரும்பாலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து புகைப்படம் எடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஒரு கைடு இல்லாமல் அந்த குகைகளின் வரலாற்றுச் சிறப்பினை நாம் புரிந்து கொள்ள முடியாது.
அஜந்தா எல்லோரா போல அருமையான குடவரை சிற்பங்கள் கொண்டவை இந்த இரண்டு மலைகளும்.
கந்தகிரி மலை ஏறும் இடத்தில் நிறைய கடலை, பட்டாணி விற்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கடலை வாங்கி அங்கே கூட்டம் கூட்டமாக இருக்கின்ற குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கொடுக்கின்றனர். சிலர், குறிப்பாகப் பெண்கள் குரங்குகளுக்குப் பயந்து கடலைப் பொட்டலத்தை தங்களது கைப்பையில் வைக்கின்றனர். அதனால் குரங்குகள் கைப்பையைப் பிடுங்குகின்றன. நானும் ஒரு கைப்பை வைத்திருந்தேன். குரங்கு அதனைப் பிடுங்கப் பார்த்தது. பின்னர் நான் அதனை விட புத்திசாலி என்பதை உணர்ந்து கொண்டு, கீழே இறங்கி ஓடிவிட்டது.
எல்லோரா போல அருமையான குடவரை சிற்பங்கள் கொண்டவை இந்த இரண்டு மலைகளும்.