December 6, 2025, 7:08 PM
26.8 C
Chennai

சுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்திபதம்
108 ஞானமுத்துக்கள்
11. புகையும் நெருப்பை விட ஜ்வாலை சிறந்தது!

ஸ்லோகம்:

அலாதம் திஸ்துகஸ்யேவ முக்ஷூர்தமபி விஜ்வல|
மா துஷாக்னிரிவானர்சிர்தூமாயஸ்ய ஜிஜீவிஷு:||
முஹூர்தம் ஜ்வலிதம் ஸ்ரேய: ந ச தூமாயிதம் சிரம்|
மா ஹஸ்ம கஸ்யசித் கேஹே ஜனீ ராஜ்ஞ: கரோ ம்ருது:||
மகாபாரதம்.

பொருள்:

கருங்காலி மரத்தின் கட்டை தீப்பந்தம் போல் பக்கென்று தீப்பிடித்து ஒரு முகூர்த்த கால நேரமாவது ஒளிவிடும். அது, உமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும் என்பது போல் வாழாது. நீண்டகாலம் புகை விட்டுக் கொண்டு ஒளியின்றி வாழ்வதை விட ஒரு முகூர்த்த காலம் பிரகாசமான ஜ்வாலையோடு வாழ்வது மேல்.

விளக்கம்:

மகாபாரதம் உத்யோக பருவத்தில் குந்திதேவி தன் மகனான தர்மபுத்திரனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் மூலம் செய்தி அனுப்பி க்ஷத்திரிய தர்மத்தை போதிக்கும் ஒரு கதை உள்ளது. ‘விதுலோ பாக்கியானம்’ என்ற பெயரில் இது பிரசித்தியாக உள்ளது. இதில் விதுலா என்ற க்ஷத்திரிய பெண், போரிலிருந்து ஓடிவந்த தன் மகனிடம் கூறிய சொற்களாக இந்த சுலோகம் உள்ளது.

க்ஷத்ரிய தர்மத்தைக் கடைபிடித்து போரில் வெற்றியோ வீர சுவர்க்கமோ அடைய வேண்டும் என்று ஒரு தாய் தன் மகனுக்கு அளிக்கும் செய்தி இது. சஞ்சயன் என்ற தன் மகனின் கோழைத்தனத்தை கண்டித்து அவன் தாய் விதுலா இப்படிப்பட்ட மகனை எந்த தாயும் பெறக் கூடாது என்கிறாள் வேதனையோடு. இது வீரத் தாய்மார்களான வீரப்பெண்மணிகள் கடைபிடித்த உயர்ந்து எடுத்துக்காட்டு.

அதேபோல், ‘பல்நாட்டு’ யுத்தத்தில் (ஆந்திராவில் பல்நாடு என்ற இடத்தில் 1182 ல் நடந்த போர்) பாலச்சந்திரனுக்கு அவன் தாய் மாஞ்சாலா உபதேசிக்கிறார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆந்திர வீரன் ‘கட்கதிக்கனா’ வரலாறு கூட இப்படிப்பட்டதே!

agni2
agni2

யுத்த தர்மத்திற்கு மாறான முறையில் பகைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுற்றி வளைத்த போது புறமுதுகு காட்டாமல் போராடி வீர சுவர்க்கத்தை அடைந்த அபிமன்யுவின் புகழ் அழியாமல் நிற்கிறது.

பாரத நாட்டு எல்லையில் தம் வீரதீர பராக்கிரமத்தைக் காட்டி எதிரிகளின் கர்வத்தை அடக்கிய பரம வீர படைவீரர்களின் வீரவரலாறு இந்த ஸ்லோகத்தில் கூறியதுபோல் ஒளி வீசியவர்களின் வரலாறே!

சில ஆண்டுகளே இந்த பூமி மீது வாழ்ந்து சாசுவதமாக நம் இதயங்களில் வாழ்ந்து வரும் ஜகத்குரு ஆதி சங்கரரைப் போல, சுவாமி விவேகானந்தரைப் போல, சர்தார் பகத்சிங் போல வாழும் காலம் வரை பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும். சுய தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்த செய்யுள் அளிக்கும் செய்தி.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories